தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் நிலைய எல்லைகுட்பட்ட பகுதியில் கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்தவர் கைது – 1½ கிலோ கஞ்சா மற்றும் சுமார் 9 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல். முறப்பாடு காவல் நிலைய போலீசருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி முறப்பநாடு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. சங்கரலிங்கம் மற்றும் போலீசார் நேற்று (15.12.2025) வல்லநாடு தேசிய நெடுஞ்சாலை அருகே ரோந்து பணி மேற்கொண்ட போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தவரை விசாரணை செய்ததில் அவர் வல்லநாடு பகுதியைச் சேர்ந்த துரைப்பாண்டி மகன் முப்புடாதி (26). என்பதும் அவர் 1 ½ கிலோ கஞ்சா மற்றும் சுமார் 9 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனடியாக மேற்படி போலீசார் குற்றவாளி முப்புடாதியை கைது செய்து அவரிடமிருந்து கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















