திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், ஆஷா ஜெபகர் தலைமையிலான காவல்துறையினர் இந்திரா நகர் அருகே புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், வீரவநல்லூர், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த படாபட்டன் (48). என்பவரது கடையில் சோதனை செய்து பார்த்த போது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து வீரவநல்லூர் காவல் ஆய்வாளர், சுஜித் ஆனந்த் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு படாபட்டனை (26.02.2025) அன்று கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து 420 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்