திருநெல்வேலி: திருநெல்வேலி மானூர் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்தபோது கானார்பட்டியில் ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து மானூர் வட்ட காவல் ஆய்வாளர், சந்திரசேகர் வழக்கு பதிந்து கடை உரிமையாளர் ஆபிரகாமை (43). கைது செய்ததுடன் அவரிடமிருந்து 4 கிலோ 275 கிராம் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்