திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி பகுதியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், முருகன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, அரசு மருத்துவமனை அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த முனைஞ்சிபட்டியை சேர்ந்த சுடலைகண்ணு (42). என்பவரை சோதனை செய்ததில் அவர் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த மூலைக்கரைப்பட்டி காவல் துறையினர் சுடலைக்கண்ணுவை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 12 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















