திருநெல்வேலி : திருநெல்வேலி மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, அண்ணா நகர் சந்திப்பு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த மேலப்பாளையத்தைச் சேர்ந்த தேவகுமார்(35). என்பவரை மறித்து விசாரணை மேற்கொண்டு சோதனை செய்ததில், அவர் சுமார் 6.075 கிலோ புகையிலைப் பொருள்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப் பதிந்து தேவகுமாரை கைது செய்த, காவல்துறையினர் அவரிடமிருந்து புகையிலைப் பொருள்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















