திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் மானூர் உக்கிரன்கோட்டை அருகே காவல் உதவி ஆய்வாளர், முகைதீன் மீரான் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் இருந்த போது, தென்காசி மாவட்டம், ஊத்துமலை, கடகனேரியை சேர்ந்த மன்மதன் (40). என்பவர் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல் உதவி ஆய்வாளர் அவரை கைது செய்து அவர் வைத்திருந்த 5 கிலோ 205 கிராம் புகையிலை பொருட்களையும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்