திருநெல்வேலி: திருநெல்வேலி சுத்தமல்லி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், சினேகாந்த் தலைமையில் காவல்துறையினர் கொண்டா நகரம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த பாவூர்சத்திரத்தை சேர்ந்த பாலமுருகன் (38). பிரானூர், வல்லம் பகுதியை சேர்ந்த கைக்கொண்டான் (46). ஆகிய இருவரையும் சோதனை செய்ததில், புகையிலை பொருட்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் உதவி ஆய்வாளர், இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 44 கிலோ 130 கிராம் புகையிலை பொருட்களையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















