திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் மானூர் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் சஜீவ் தலைமையிலான காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பள்ளிக்கோட்டை பகுதியில் உள்ள தேநீர் கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அந்தக் கடையில் சோதனை மேற்கொண்டதில் 330 கிராம் புகையிலைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, கடை உரிமையாளரான பள்ளிக்கோட்டை, வடக்கு தெருவை சேர்ந்த மயில் மனைவி பேச்சியம்மாள் (55). என்பவரை கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்