அரியலூர் : அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வரதராஜன் பேட்டையில் ஹான்ஸ் , குட்கா , பான் மசாலா முதலிய பொருட்களை கடையில் வைத்து விற்பனை செய்த நபர் கைது. தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை , குட்கா மற்றும் போதை வஸ்துகளை விற்பது சட்டப்படி குற்றமாகும்.
பள்ளி மற்றும் கல்லூரி அமைந்துள்ள இடத்திற்கு 100 மீட்டர் சுற்றளவில் இவைகளை விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படும். அவர்களது கடைக்கு சீல் வைக்கப்படும். மேலும் மாணவர்களுக்கு போதை வஸ்துகளை விற்பனை செய்தால் சிறுவர் நீதி சட்டத்தின்படி கடை உரிமையாளர்/விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.