திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பல்வேறு இடங்களில் விற்பனை செய்வதாக வந்த தகவலை தொடர்ந்து நத்தம் காவல் ஆய்வாளர் சிவராம கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அப்பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்பொழுது அண்ணா நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தனர். இதில் 42 புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை பறிமுதல் செய்து நத்தம் முஸ்லீம் தெற்குத் தெருவைச் சேர்ந்த முகமது இசாக் (38). என்பவரை கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி