கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய பகுதியில் வெளி மாநிலத்திலிருந்து குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் போலீசார் சூளகிரி To கிருஷ்ணகிரி NH ரோட்டில் சுண்டகிரி அருகே உள்ள ஜூனியர் குப்பண்ணா ஓட்டல் முன்பு வந்த வாகனத்தை நிறுத்த சொல்லியும் வாகனத்தை நிறுத்தாமல் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டி சென்றவர்களை தடுத்து நிறுத்தி வாகனத்தை சோதனை செய்தபோது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹72,000/- ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் இருந்தது,வெளி மாநிலத்திலிருந்து புகையிலை பொருட்கள் கடத்தி வந்த இரண்டு நபர்களை கைது செய்து வாகனத்துடன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்