கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தண்ணீர் பள்ளம் கிராமத்தில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது வாகனத்தின் ஓட்டுனர் வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடிவிட்டார். நிறுத்திய வாகனத்தை சோதனை செய்ததில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹ 2,52,400 /- ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் இருந்தது, வாகனத்துடன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
















