திண்டுக்கல் : திண்டுக்கல் புறநகர் டிஎஸ்பி.சிபி சாய் சௌந்தர்யன் உத்தரவின் பேரில் சாணார்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பொன்குணசேகரன் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது V.S.கோட்டை பகுதியில் கடைகளுக்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த திண்டுக்கல் குட்டியபட்டி பரணிநகர் பகுதியை சேர்ந்த காதர்முகமது மகன் அரபு அலி(எ)பாபு என்பவரை கைது செய்து அவரிடமிருந்து அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா