இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போதைப்பொருள் மற்றும் புகையிலைப் பொருட்களுக்கு எதிரான தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து திருப்புல்லாணி காவல்நிலையப் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில், சட்டவிரோத விற்பனைக்காக வாகனத்தில் புகையிலைப் பொருட்களை கொண்டு சென்ற பிர்தோஷ் கான், விஸ்வநாதன் மற்றும் சரத்குமார் ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள். மேலும், அவர்களிடமிருந்து சுமார் 52 கிலோ புகையிலைப் பொருட்கள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி