தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.S. மாதவன், உத்தரவின் பேரில் காவல்துறையினர் போதைப் பொருட்களுக்கு எதிரான தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர் .
(15.03.2026) அன்று செங்கோட்டை தேன்பொத்தை பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டதில் தேன்பொத்தை திருமலைக்குமார் (27). மற்றும் விஸ்வநாதபுரம் ராஜேஷ் குமார் (29). ஆகியோர் விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 87 கிலோ எடை கொண்ட ( மதிப்பு சுமார் ரூ 47,000) புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















