திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி பகுதியில் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் . அப்போது, சந்தேகத்தின் பேரில் முதியவர் ஒருவரை சோதனை செய்ததில், அரசால் தடை செய்யப்பட்ட 5 கிலோ 625 கிராம் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்ததும், அவர் ஏமன் புதுக்குளத்தைச் சேர் ந்த சிங்கக்குட்டி (70). என்பதும் தெரியவந்தது. அவரை நாங்குநேரி காவல் உதவி ஆய்வாளர், ஆபிரகாம் கைது செய்து அவரிடம் இருந்து புகையிலை பொருள்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்