திண்டுக்கல் : திண்டுக்கல் தாடிக்கொம்பு, சேர்ந்த வேல் என்பவர் தனது நண்பருடன் சரளப்பட்டி பிரிவு அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த செட்டிநாயக்கன்பட்டி, பாலக்குட்டையை சேர்ந்த சத்யப்பிரியன்(24). என்பவர் தான் பெரிய ரவுடி என்று கூறி உடைந்த பீர் பாட்டிலை காட்டி கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி பணம் பறிக்க முயன்றார். இது குறித்து வேல் அளித்த புகாரின் பேரில் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் சார்பு ஆய்வாளர் சூரியகலா மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட சத்தியபிரியனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















