தர்மபுரி : தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், நமது மேற்கு மண்டல ஹாக்கி அணியினர் கடந்த (23.11.2023) முதல் (12.12.2023_ தேதி வரை கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற பி. டிவிஷன் ஹாக்கி லிக் விளையாட்டுப் போட்டியில் கோலார் மாவட்டம் ஹாக்கி கிளப் சார்பாக நமது மேற்கு மண்டல காவலர் ஹாக்கி அணியினர் பங்கேற்று அதில் மூன்றாம் இடம் பெற்று வெற்றி பெற்றனர். அதனை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஸ்டீபன் ஜேசு பாதம் அவர்களிடம் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியமூர்த்தி காவல் ஆய்வாளர் திரு அன்பழகன் உடன் இருந்தனர்.