தூத்துக்குடி: செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செய்துங்கநல்லூர் தென்னஞ்சோலைத் தெருவைச் சேர்ந்த அங்கப்பன் மகன் மருதுபாண்டி (21) என்பவர் கடந்த 31.03.2021 அன்று தனது கூட்டாளிகளான தென்திருப்பேரை மங்கம்மா தெருவைச் சேர்ந்த செலவன் மகன் பென்னிஸ் கிங், செய்துங்கநல்லூரைச் சேர்ந்த சந்தானம் மகன் கணேசன், அவரது சகோதரர் சந்தனராஜ் மற்றும் மந்திரம் மகன் கோட்டை சுந்தரம் ஆகியோருடன் சேர்ந்து செய்துங்கநல்லூர் சுந்தரபாண்டி சாஸ்தா கோவில் அருகில் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு வீட்டில் கொள்ளையடிக்க திட்டம் போட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது செய்துங்கநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அந்தோணி திலீப் தலைமையிலான போலீசார் அங்கு ரோந்து வந்த போது இவர்கள் ஆயுதங்களுடன் இருப்பது தெரியவந்தது.
அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடியில் ஒரு வீட்டில் மேற்படி 5 பேரும் சேர்ந்து கூட்டுக் கொள்ளயைடிக்க திட்டமிட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் திரு. ராஜா சுந்தர் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து அவர்கள் வைத்திருந்த அரிவாள் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி இவ்வழக்கின் முக்கிய எதிரியான செய்துங்கநல்லூர் தென்னஞ்சோலைத் தெருவைச் சேர்ந்த அங்கப்பன் மகன் மருதுபாண்டி (21) என்பவர் மீது
குண்டர் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ள செய்துங்கநல்லூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அறிக்கை தாக்கல் செய்தார்.
அதன்படி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையின் பேரில் மேற்படி எதிரி மருதுபாண்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் டாக்டர் கி. செந்தில்ராஜ், உத்தரவிட்டார்.
(பொறுப்பு செய்துங்கநல்லூர் காவல் நிலையம்) திரு. அன்னராஜ் அவர்கள் மேற்படி எதிரி மருதுபாண்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையிலடைத்தார்.