தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திப்பிராஜபுரம் சென்னியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் மகன் செந்தில்நாதன் (வயது 23) பார் காண்டிராக்டரான இவர், கடந்த 2013-ம் ஆண்டு திப்பிராஜபுரம் அருகே உள்ள மாடாகுடி பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து கட்டை ராஜா உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த நிலையில் வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்பே கடந்த 2015-ம் ஆண்டு மனோகரனும், 2016-ம் ஆண்டு மாரியப்பனும் இறந்து விட்டனர். இதையடுத்து முக்கிய குற்றவாளியான ராஜா என்கிற கட்டை ராஜா, ஆறுமுகம், செல்வம் ஆகிய 3 பேரும் இந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வந்தனர். இந்த வழக்கில் வாதி, பிரதிவாதி, விசாரணை அதிகாரி, சாட்சியங்கள் உள்ளிட்ட அனைவரிடமும் நீதிபதிகள் விசாரணை நடத்தி முடித்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.