சிவகங்கை: நிபந்தனை ஜாமீனில் வந்த குற்றவாளி மனோ காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த போது வெட்டிக் கொலை. கொலையாளிகள் தப்பி ஓட்டம்.
சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முன்விரோதம் காரணமாக இப்படுகொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் (இகாப) உத்தரவு பேரில் காரைக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன்(தகாப) மற்றும் தேவகோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் கௌதம்(தகாப) மேற்பார்வையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி