திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் பெருமாள் புதூர் சின்ன காந்திபுரம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் பேருந்துக்காக காத்திருந்த போது சென்னையை சேர்ந்த சுரேஷ் என்பவர் அவரிடமிருந்து உடைமைகளையும் பணத்தையும் பரித்துள்ளார். பழனி பேருந்து நிலையப் பகுதியில் ரோந்து பணியில் இருந்த பழனி நகர் சார்பு ஆய்வாளர் விஜய் அவர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் அவரை விசாரித்த போது தெரியவந்தது இது குறித்து இவரிடம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர் மீது சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதனை அடுத்து சுரேஷை கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா