திண்டுக்கல்: பழனியில் பள்ளி சிறுவர்களுக்கு சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக பள்ளி சிறுவர்களுக்கு காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பழனி டிஎஸ்பி தனஜெயன் அவர்களின் உத்தரவின் பெயரில் பழனி காவல் ஆய்வாளர் மணிமாறன் அவர்களின் மேற்பார்வையில் பழனி நகர் காவல் சார்பு ஆய்வாளர் விஜய் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் திண்டுக்கல் ரோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் சந்தேகத்து இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த பிரபல குற்றவாளி மற்றும் கஞ்சா விற்பனையாளராகிய பழனியைச் சேர்ந்த தௌஃபிக் மற்றும் சதாம் உசேன் ஆகிய இருவர் காவல்துறையை கண்டவுடன் தமது வாகனங்களை கீழே போட்டுவிட்டு தப்பி செல்ல முயற்சித்தனர்.
அதனை அறிந்த காவல்துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்து சோதனை மேற்கொண்டதில் அவர்களிடமிருந்து சுமார் 100 கிராம் மதிப்பிலான கஞ்சா கைப்பற்றப்பட்டது. உடனடியாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய தௌஃபிக் மற்றும் சதாம் உசேன் ஆகிய இருவர் மீது காவல் நிலைய சரித்திர பதிவேட்டில் குற்றவாளிகள் என பெயர் பெற்றவர் அவர். இந்த இரண்டு நபர்கள் மீது பல்வேறு அடிதடி வழக்குகள் மற்றும் கஞ்சா வழக்குகள் ஏற்கனவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா















