திண்டுக்கல் : திண்டுக்கல் வேடசந்தூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சேடப்பட்டி பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த அகரம் கொண்ட சமுத்திரப்பட்டியைச் சேர்ந்த சங்கிலி (வயது 63). அவரது மகன் தங்கதுரை (32 ).ஆகிய 2 பேரை எஸ்.பி தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகு பாண்டி தலைமையிலான தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்தனர் .மேலும் அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா,4 செல் போன், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா