சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களான ஆண்கள் ஓட்டும் பல்சர் பெண்கள் ஓட்டும் ஆக்டிவா டியோ போன்ற வாகனங்கள் காணவில்லை என்று காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார்கள்வந்த நிலையில் காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் தனி படை காவல்துறையினர் காரைக்குடி வடக்கு காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் தீவிரமாக சிசிடிவி காட்சிகளை வைத்து தேடி வந்த நிலையில் பிரபல இருசக்கர வாகன குற்றவாளி திருத்துறைப்பூண்டியை சேர்ந்த ராஜ்குமார் என்பது தெரிய வந்தது அதனைத் தொடர்ந்து அவனது தொலைபேசி எண்ணை கண்காணித்த தனிப்படை காவலர்கள் நேற்று முன்தினம் காரைக்குடியில் ஒரு பல்சர் வாகனத்தை திருடி செல்வது அறிந்து அவனை சுற்றி விளைத்து பிடித்து விசாரணை செய்ததில் காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் திருடிய 8 பல்சர் பைக் ஒரு டியோ ஒரு அக்டிவா இரண்டு டிவிஎஸ் ஜூபிடர் என மொத்தம் 12 இருசக்கர வாகனங்களை பல்வேறு கிராமங்களில் தான் திருடிய இருசக்கர வாகனங்களை விற்பனை செய்தது தெரிய வந்தது 12 இருசக்கர வாகனங்களை அவற்றை கைப்பற்றிய காரைக்குடி வடக்கு காவல் துறையினர் ராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர் .
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி