திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பாண்டியயாபுரம் தெருவை சேர்ந்த நாகராஜன் மகன் சதீஷ் குமார் (22). என்பவர் சமூக வலைதளமான “Instagram” ல் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய வசனங்கள் வைத்து கையில் அரிவாளுடன் வீடியோ ஒன்றை பதிவு செய்து சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளார்.
இது குறித்து முக்கூடல் காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்ததையடுத்து உதவி ஆய்வாளர், ஆக்னல் விஜய் வழக்கு பதிவு செய்து வீடியோவை வெளியிட்ட சதீஷ் குமாரை (12.05.2025) அன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார். திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இது போன்று பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாத