திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம், தாமரைகுளம், நடுத் தெருவை சேர்ந்த சண்முகவேல் என்பவரின் மகன் மாடசாமி (22). தாமரைகுளம், தெற்கு தெருவை சின்னா என்பவரின் மகன் வக்கீம் பாண்டியன் (19). இருவரும் சமூக வலைதளமான ‘Instagram’ யில் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை தூண்டும் வகையில் அருவாளுடன் இருக்க கூடிய புகைப்படம் மற்றும், சர்ச்சைகுரிய வசனங்களை வீடியோவாக பதிவு செய்தும் சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளனர்.
இது குறித்து விஜயநாராயணம் காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்ததையடுத்து உதவி ஆய்வாளர், உதயலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சமூக வலைத்தளங்களில் பிரச்சனையை தூண்டும் விதமாக வீடியோவை வெளியிட்ட மாடசாமி, வக்கீம் பாண்டியன் இருவரையும் (01.04.2025) அன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்