திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரில் சமீபத்தில் நடைபெற்ற கொலை வழக்கை மேற்கோள்காட்டி Instagram வலைதளத்தில் இரு பிரிவினரிடையே பிரச்சினையை தூண்டும் விதமாக வீடியோ பதிவிட்டது சம்பந்தமாக தாலுகா காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்து வந்த நிலையில் இச் செயலில் ஈடுபட்டது நாங்குநேரி, ஆலப்புதூரை சேர்ந்த மாடசாமி (19). அலங்காரபேரியை சேர்ந்த அருண் முத்து (20). மற்றும் ஒரு இளஞ்சிறார் என தெரியவந்தது. உடனடியாக தாலுகா காவல்துறையினர் மேற்படி செயலில் ஈடுபட்ட இரு நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியும், இளஞ்சிறாரை கூர்நோக்கு இல்லத்தில் ஆஜர்படுத்தியும் நடவடிக்கை மேற்கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்