திருநெல்வேலி: திருநெல்வேலி சீவலப்பேரி, பொட்டல் நகரை சேர்ந்த வள்ளிமுத்து (24). என்பவர் சமூக வலைதளமான Instagram யில் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை தூண்டும் வகையில் வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளார்.
இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்ததையடுத்து கங்கைகொண்டான் வட்ட காவல் ஆய்வாளர், வேல்கனி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வீடியோவை வெளியிட்ட வள்ளிமுத்துவை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இது போன்று பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N.சிலம்பரசன்.இ.கா.ப, தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்