திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி மஞ்சாங்குளம், நடுத் தெருவை சேர்ந்த கந்தையா (29). சமூக வலைதளமான Instagram யில் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை தூண்டும் வகையில் அருவாளுடன் இருக்க கூடிய புகைப்படத்தை பதிவு செய்து சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளார்.
இது குறித்து நாங்குநேரி காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்ததையடுத்து காவல் உதவி ஆய்வாளர், ஐசக் ஜெயசீலன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இரு தரப்பினரிடையே பிரச்சனையை தூண்டும் விதமாக புகைப்படம் வெளியிட்ட கந்தையாவை (13.02.2025) கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்