திருநெல்வேலி : திருநெல்வேலி தாலுகா பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு திருட்டு வழக்கில் ஈடுபட்ட வாகை குளத்தை சேர்ந்த பெரியசாமி (35). என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். இவர் நீதிமன்ற விசாரணைக்கு 3½ மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால் நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. பெரிய சாமியை தாலுகா காவல்துறையினர் தேடி வந்த நிலையில் (28.08.2025) அன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்