திருநெல்வேலி: திருநெல்வேலி முன்னீர்பள்ளம் பகுதியில் கடந்த 2023- ம் வருடம் கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் திருநெல்வேலி மாவட்டம், கீழ சேவல், பெருமாள் கோவில் சன்னதி தெருவை சேர்ந்த மாடசாமி @ மகேந்திரன் (20). என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். அவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த ஒரு மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், அவருக்கு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. மாடசாமி @ மகேந்திரனை முன்னீர்பள்ளம் காவல்துறையினர் தேடி வந்த நிலையில் (21.01.2025) அன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்