திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2004 -ம் வருடம் திருட்டு வழக்கில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்டம், மையவாடி, பெருமாள்புரத்தை சேர்ந்த காமராஜ் (53). என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். மேற்படி குற்றவாளி நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 1 வருடம் 10 மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், ராதாபுரம் நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. மேற்படி காமராஜை திசையன்விளை காவல் நிலைய ஆய்வாளர் சீதாலட்சுமி தலைமையில் காவல்துறையினர் தேடிவந்த நிலையில் (24.10.2024) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்