திருநெல்வேலி : திருநெல்வேலி சுத்தமல்லி பகுதியில் கடந்த 2022 -ம் வருடம் திருட்டு வழக்கில் ஈடுபட்ட வீரவநல்லூர், பாரதிநகரை சேர்ந்த சையது இப்ராஹீம் (31). என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்து நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 1 மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், குற்றவாளிக்கு சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. மேற்படி சையது இப்ராஹீமை சுத்தமல்லி காவல் நிலைய காவல்துறையினர் தேடிவந்த நிலையில் (19.10.2024) இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்