திருநெல்வேலி: தென்மண்டல காவல்துறை தலைவர் விஜயேந்திர பிதாரி, இ.கா.ப. தென் மண்டலம் முழுவதும் நீதிமன்ற பிடியாணை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க பிறப்பித்த உத்தரவுப்படி திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர், ப. சரவணன் இ.கா.ப அறிவுரைபடி சரகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களிலும், குற்றவாளிகளை கைது செய்ய தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி சரகத்திலுள்ள நான்கு மாவட்டங்களிலும் மொத்தம் 163 நபர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் திருநெல்வேலி மாவட்டத்தில் 20, தென்காசி மாவட்டத்தில் 36, தூத்துக்குடி மாவட்டத்தில் 43, மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 64 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை எடுத்து வரும் இந்த அதிரடி நடவடிக்கைகளை அறிந்து, பிடியாணை நிலுவையிலுள்ள 86 நபர்கள் தாமாகவே முன்வந்து நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். இதன் மூலம், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு, வழக்கில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காண வழி வகுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















