திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு அடிதடி, கொலை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக வீரவநல்லூா் பகுதியைச் சேர்ந்த வேல்துரை என்ற பார்த்தீபன் (28). கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிணையில் வெளி வந்த அவர், மேற்குறிப்பிட்ட குற்ற வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த இரண்டரை மாதங்களாக தலை மறைவானதால் நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது. இதையடுத்து வீரவநல்லூர் காவல்துறையினர் வேல்துரை என்ற பார்த்தீபனை கைது செய்து சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

















