திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2025 -ம் ஆண்டு போக்சோ வழக்கில் தொடர்புடைய கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த மாரியப்பன்(35) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். நீதிமன்ற விசாரணைக்கு 4 மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த அவருக்கு திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. மாரியப்பனை அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் தேடிவந்த நிலையில் (28.03.2026) அன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















