திருநெல்வேலி : திருநெல்வேலி சுத்தமல்லி பகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு திருட்டில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில் செங்குளத்தை சேர்ந்த கோமேஸ்வரன் (38). என்பவர் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்தார். இந்நிலையில் அவர், நீதிமன்ற விசாரணைக்கு தொடர்ந்து 13 மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால் அவருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. சுத்தமல்லி காவல்துறையினர் அவரை தேடிவந்த நிலையில் (06.10.2025) அன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்