திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள் என சுமாா் 1300-க்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா். அவர்களிடம் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் இருக்கிறதா என்பதை கண்டறிய
(01.12.2024) அன்று பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையா் சரவணன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அதிகாலை முதல் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். இதில் தடை செய்யப்பட்ட பொருட்களான கைபேசி சிம்கார்டு புகையிலை பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் ஏதேனும் உள்ளதா என கைதிகள் தங்கியிருக்கும் அறைகள், கழிப்பறைகள், சமையலறை, சிறை வளாகம் முழுவதும் சோதனை செய்தனா். இது பற்றி காவல்துறை தரப்பில் கூறும் பொழுது இது வழக்கமாக நடைபெறும் சோதனை தான் என்றும், தற்போது நடந்த சோதனையில் ஒன்றும் பிடிபடவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்