கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பாகலூா் சாலை, எலுவப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த கோபாலப்பா மகன் முனிராஜ் (40). இவா் பால் வியாபாரம் செய்து வந்தாா். வேலைக்காரணமாக அருகில் உள்ள பாகலுருக்குச் சென்று விட்டு எலுவப்பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்த முனிராஜை தடுத்து நிறுத்தி மா்ம நபா்கள் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனா். இந்த கொலை சம்பவம் குறித்து அந்த வழியாகச் சென்றவா்கள் பாகலூா் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனா். உயிரிழந்த முனிராஜ் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ஓசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய நபா்களை, பாகலூா் போலீசார் தேடி வருகின்றனா். உயிரிழந்த முனிராஜுக்கு மனைவி, ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனா். தொழில் போட்டி, முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா இருக்குமா என்பது குறித்து பாகலூா் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்