தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பென்னாகரம், நல்லம்பள்ளி, பாலக்கோடு, காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் ஆகிய பகுதிகளில் ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைகள், மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட அத்தியவசிய அங்காடிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து அத்தியவசிய கடைகளை தவிர மற்ற கடைகள் திறக்கப்படுகிறதா என காவல் துறையினரும், வருவாய்த் துறையினரும் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் அரூர் திரு.வி.க. நகரில் செயல்பட்டு வந்த பிரபல தனியார் பால் நிறுவனத்தின் விற்பனை அங்காடியில் ஊரடங்கு விதிகளை மீறி, கூட்டம் சேர்த்து ஐஸ்கிரீம், ஐஸ் கேக் உள்ளிட்ட, அரசு அனுமதிக்க பொருட்களை ரகசியமாக விற்பனை செய்து வந்துள்ளனர்
. இதனால் அங்காடியில் மக்கள் கூட்டமாக இருந்ததை அரூர் காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் கண்டறிந்து, காவல் துறையினரும், கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரசாத் உள்ளிட்ட வருவாய்த் துறையினரும் இணைந்து பிரபல தனியார் பால் தயாரிப்பு நிறுவனத்தின் விற்பனை அங்காடிக்கு சீல் வைத்தனர்