திண்டுக்கல் : திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2021- ம் ஆண்டு ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள பட்டத்து நாயக்கன்பட்டி குணா(22), என்பவர் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் போலீசார் குணாவை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ வழக்கு விசாரணைக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் குணாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 20000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா