திண்டுக்கல் : திண்டுக்கல்லில் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு 10 வருடங்கள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் ஆபராதம் – திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2011-ம் ஆண்டு பாலியல் வன்புணர்வு செய்த சசிகுமார்(50), என்பவரை, திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் துறையினர் கற்பழிப்பு வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், அறிவுறுத்தலின் பேரில், திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அமுதா, தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் ஜோதி ஆகியோரின் சீரிய முயற்சியால் இன்று திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி, சசிகுமாருக்கு 10 வருடங்கள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி