திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு (62). வயது மூதாட்டியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்து நகையை திருடிச் சென்ற வழக்கில் நத்தம் செந்துறை பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் (20). என்பவரை நத்தம் காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப்., இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.தங்க முனியசாமி அவர்கள், நீதிமன்ற முதல்நிலைக் காவலர் திரு.சண்முகவேல் அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் திருமதி.ஜோதி அவர்களின் சீரிய முயற்சியால் இன்று (14.10.2024)-ம் தேதி இன்று திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி சரவணகுமார் என்பவருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 16 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.8,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா