திண்டுக்கல்: கொடைக்கானல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த (23.12.2019) -ஆம் தேதி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடைக்கானல் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ஜீவா (27) என்பவரை கொடைக்கானல் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். பாஸ்கரன் அவர்களின், அறிவுறுத்தலின்படி கொடைக்கானல் காவல் நிலைய ஆய்வாளர். பாஸ்டின் தினகரன் அவர்கள், நீதிமன்ற முதல்நிலைக் காவலர் திருமதி. தீபா அவர்கள், மற்றும் அரசு வழக்கறிஞர். ஜோதி அவர்களின், சீரிய முயற்சியால் இன்று (27.07.2023) . -ம் தேதி திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள், குற்றவாளி ஜீவா என்பவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.7,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா