திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015 ஆண்டு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அம்மாபட்டி, KK புதூர் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம்(35). என்பவரை ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப், இ.கா.ப அவரது அறிவுறுத்தலின்படி ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்.பேபி, நீதிமன்ற முதல்நிலை காவலர்.மாரியம்மாள் மற்றும் அரசு வழக்கறிஞர்.ஜோதி அவரது சீரிய முயற்சியால் திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி குற்றவாளி மாணிக்கம் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 5,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா