தேனி: ராஜதானி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியை சேர்த்த கருப்பசாமி (31) என்பவர் 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை காவல் நிலைத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் திரு.முத்துமணி அவர்கள் தலைமையில் SI திருமதி.ரதிகலா ஆகியோர்கள் POCSO சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கருப்பசாமியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இன்று தேனி மாவட்ட மகிளா விரைவ நீதிமன்றத்தில் இறுதி விசாரணை முடிவில் நீதிபதி திருமதி.கீதா, ML., அவர்கள் கருப்பசாமியை குற்றவாளி எனக் கூறி 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ₹ 10,000/- அபராதம் கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கூறி தீர்ப்பளித்தார்.
மேலும் இவ்வழக்கினை சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர், நீதிமன்ற காவலர் மற்றும் அரசு வழக்குரைஞர் ஆகியோர்களுக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தார்.