திண்டுக்கல்: கள்ளிமந்தயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த (09.04.2019)-ஆம் தேதி சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த பழனி சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த மதன்குமார் (25) என்பவரை கள்ளிமந்தயம் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி இடையகோட்டை சரக காவல் நிலைய ஆய்வாளர் முத்துலட்சுமி அவர்கள், நீதிமன்ற முதல்நிலை காவலர் கண்ணன் அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் ஜோதி அவர்களின் சீரிய முயற்சியால் (20.07.2023)-ம் தேதி திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி மதன்குமார் என்பவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.15,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா