திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த (17). வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர்கள் பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக பழனி, சிவகிரிபட்டியை சேர்ந்த பொன்குமார்(30). என்பவரை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். பொன்குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழனி காவல் உதவி ஆய்வாளரை வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா