திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட மகளிர் நாட்டுப்புற கலைஞர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தடுப்பதற்கான பயிற்சி பற்றிய விழிப்புணர்வு முகாம் திண்டுக்கல் நகர் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இம்முககாமில் திண்டுக்கல் மாவட்ட அனைத்து தொழிலாளர் சங்கங்களின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர். காளியப்பன் தலைமை வகித்தார். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர். வீரசாமி மற்றும் தலைவில் லீட் பவுண்டேஷன் திண்டுக்கல் மாவட்ட LC உறுப்பினர். சிவகாமி, நாட்டுப்புறக் கலைஞர்கள் எதிர்கொள்ளும் பனி சூழல் அபாயங்கள் பாதுகாக்கப்பட்ட தங்கும் இடங்கள் ஒப்பந்தமின்மை, பயண அபாயங்கள், சமமற்ற ஊதியம் போன்ற சவால்களை எடுத்துரைத்து, பெண்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட உரிமைகளை பகிர்ந்து அறிந்து கொள்ளுதல் அவசியம் என வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து தலைவி லீட் பவுண்டேஷன் திட்ட ஆலோசகர் முருகப்பெரியார், திண்டுக்கல் மாவட்டம் மகளிர் நாட்டுப்புற கலைஞர்களுக்கான பாலியல் துன்பத்தில் விழிப்புணர்வு இந்த தலைப்பு விரிவான வழிகாட்டுதலை வழங்கினார். இதனைத் தொடர்ந்து வீடு பவுண்டேஷன் தலைவர். சர்மிளா, போஸ் சட்டம் 2013 பற்றிய முழுமையான செயல்முறை விளக்கவுரை வழங்கினார். இறுதியாக திண்டுக்கல் மாவட்டம் மகளிர் நாட்டுப்புற கலைஞர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் தேவகி நன்றி உரையாற்றினார். இதில் பயிற்சியில் சுமார் 50க்கும் மேற்பட்ட நாட்டுப்புற இருபால் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















